07 July 2018

ஆதி பராபரனின் சுதனே

கன்:404

To Download Txt Lyrics file

 

                             சரணங்கள்

 

1.         ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா - இந்த

            அறிவில்லா யூதர்க்காய் ஐயனை வேண்டினீர் - யேசுநாதா

 

2.         பாடு படுத்து வோர்க்கோ நீர் மன்னிப்பீந்தீர் - யேசு நாதா

            இந்தப் பாவியாம் என் பாவப் பாரம் பெரிதல்லோ - யேசு நாதா

 

3.         யூதரிலும் பொல்லாப் பாதகரானோமே - யேசுநாதா

            மன யூகமுற்று முழுத் துரோகம் செய்தோமல்லோ - யேசு நாதா              

 

4.         அறிந்து மதிகமாய்ப் பாவங்கள் செய்தோமே - யேசுநாதா

            அவை அத்தனையும் பொறுத்தருளும் கிருபையால் - யேசுநாதா

 

5.         அன்புமிகும் வல்ல ஆண்டவரே கிறிஸ்து - யேசுநாதா

            இனி ஆகாதோனாய்க் காணேன் ஆணைகள் செய்கின்றேன் - யேசுநாதா

 

6.         மற்றவர் குற்றத்தை யாமும் மன்னித்திட - யேசுநாதா               

            நல்ல வாஞ்சையளித்து வரங்கள் புரிந்தருள் - யேசுநாதா

 

7.         பரதேசிகளெம்மை அரவணையும் கிறிஸ்து - யேசுநாதா

            திருப்பாதம் பணிந்து மன்றாடுகிறோம் கிறிஸ்து - யேசு நாதா

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...