09 July 2018

நான் நேசிக்கும் தேவன் இயேசு


            நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
          அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)
            நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்
            என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

1.         கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
            படகாய் அவர் வருவார்
            இருள்தனிலே பகலவனாய்
            இயேசுவே ஒளி தருவார்                        - நான் பாடி  

2.         பாவ நோயாலே வாடும் நேரத்தில்
            மருத்துவர் ஆகிடுவார்
            மயங்கி விழும் பசிதனிலே
            மன்னாவைத் தந்திடுவார்                     - நான் பாடி

3.         தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
            தேற்றிட வந்திடுவார்
            கால் தளரும் வேளையிலே
            ஊன்று கோலாகிடுவார்                          - நான் பாடி

4.         நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
            நான் இனிக் கலங்கிடேனே
            எந்தனுக்குக் காவலர்
            நான் உடல் அவர் உயிரே                    - நான் பாடி

2 comments:

  1. Very useful for my morning devotions

    ReplyDelete
    Replies
    1. தேவனுக்கே மகிமை!

      Delete

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...