09 July 2018

இம்மட்டும் கைவிடா தேவன்


                        இம்மட்டும் கைவிடா தேவன்
                        இனியும் கைவிடமாட்டார்
                        தாயின் வயிற்றில் தாங்கினார்
                        ஆயுள் முழுதும் தாங்குவார்
                        தாங்குவார் தப்புவிப்பார்
                        ஏந்துவார் என் தெய்வம்

1.         ஆயன் இயேசு ஆடு நான்
            ஆதலால் பயமில்லை
            சாத்தான் பறிக்க முடியாது
            சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்          - தாங்குவார்

2.         இயேசு கிறிஸ்து வசனத்தால்
            எல்லா நாளும் சந்தோஷம்
            வியாதி வறுமை வேதனை
            எது தான் பிரிக்க முடியுமோ                  - தாங்குவார்

3.         கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
            கலக்கம் எனக்கு இனியில்லை
            துதித்து துதித்து நாளெல்லாம்
            துரத்திடுவேன் சத்துருவை                   - தாங்குவார்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...