என் சகோதரா எங்கு செல்கின்றாய்


                   என் சகோதரா (சகோதரி) எங்கு செல்கின்றாய்
                        இன்று நீ ஓர் நற்செய்தியை கேட்டு செல்வாயே

1.         கஷ்டமான வாழ்க்கை உனதோ
            கவலைகளும் தோல்விகளும் உண்டா
            காத்திருக்கின்றார் உன் இயேசு ராஜனே
            கல்வாரியின் அன்பினாலே ஜெயம் தருவார்

2.         பஞ்சங்களும் பிரச்சனைகளும்
            பூமியின் மேல் கண்ணியாய் வருமே
            அன்பு தணியும் (மனிதர்) ஆறுதல் போகும்
            அளித்திடுவார் உந்தனுக்கே நித்ய சந்தோஷம்

3.         தீய மாந்தர் எதிர்த்திடுவார்
            தீமை சக்திகளும் அலைக்கழிக்கும்
            தடுமாறாதே (உண்மை) தேவனைத் தேடு
            தூய வாழ்வதை தந்திடுவார் இயேசுவை நாடு

4.         பாவ சேற்றில் தாழ்விடங்களில்
            தூரமாய் கிடக்கும் உன்னை மீட்க
            அழைக்கின்றாரே (உந்தன்) அன்பின் தேவனே
            இரட்சிப்பின் சந்தோஷத்தை நீ பெற்று செல்வாயே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு