27 July 2018

நானும் என் வீட்டாருமோவென்றால்


                   நானும் என் வீட்டாருமோவென்றால்
                        கர்த்தரையே சேவிப்போம்
                        நீயும் சேவிப்பாயா? நீயும் சேவிப்பாயா?

1.         கர்த்தரையே சேவிப்பது
            ஆகாததென்று கண்டால்
            யாரை நீ சேவிப்பாய் என்பதை
            இன்றே நீ தீர்மானம் செய்வாய்               - நானும்

2.         அடிமையான நம்மையுமே
            தேவாதி தேவன் மீட்டார்
            மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
            கர்த்தரை சேவிப்பாயா?            - நானும்

3.         நம் பாதையில் காப்பாற்றியே
            கர்த்தர் நடத்தினாரே
            கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
            நன்றியாய் சேவிப்பாயா?                         - நானும்         

4.         நன்மையான ஈவுகளைத்
            தேவாதி தேவன் தந்தார்
            கீழ்படிந்து அவர் சத்தம் கேட்டு
            சாட்சியாய் ஜீவிப்பாயா                          - நானும்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...