07 July 2018

தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி


பல்லவி

                   தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி
                        தாரணியோர் மேல் கடுந் தாகமானீரோ

சரணங்கள்

1.         நித்திய ஜீவநதி நீரே யாயினும்
            நீசக் குருசில் நாதா தாகமானீரோ                    - தாக

2.         கடற்காளானின் கடும் காடியோ உமக்
            கான பானமாம் நல்ல கர்த்தனே தேவா              - தாக

3.         பாவியடி யார் உம்மில் பாசம் வைத்திட
            ஞான தாகத்தால் வெகு நாட்டங் கொண்டீரோ - தாக

4.         தேவ வசன ஞான திவ்விய பாலில்
            தேட்டமாய் நானும் என்றும் உண்டு பருக           - தாக

5.         உந்தன் மாமிசம் ரத்தம் போஜன பானம்
            எந்தன் ஜீவனுக்கென்றும் ஏற்றதாய்க் கொள்ள    - தாக

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...