ஆறாம் மணி வேளை


சரணங்கள்

1.       ஆறாம் மணி வேளை முதல் ஒன்பது மட்டும்
            வீரா யுலகெங்கும் இருளுண்டான தென்றால்
            வேறா ருவரும் மாறிட வெய்யோனு மிருண்டு
            மாறாகின தோர் ஒன்பதாமணி வேளையில் ஐயன்

2.         தனதாகவே ஏலி, ஏலி, லாமா சபக்தானி
            எனவே வலுசத்தத்தோடு கூப்பிட்டார் இதுவோ
            கனிவான என்பரனே எனின்பரனே நீர் கைவிட்ட
            தேன் என்றனை என் ரத்தமே இதயங்களுமுண்டே

3.         அங்குற்ற சிலர் கேட்டபோ ததிரா எலியாவை
            இங்குற்றிடவே கூப்பிடுகின்றாரிது வென்றார்
            அங்கமதின் மேலே யேசு யாவும் முடிவாகில்
            தங்கட்புறமே தீர்ந்ததென்றே தம்மிலறிந்தார்

4.         கூப்பிட நல்லேசு பாவப்பலியாய் திரு ஆடு
            தெய்வத்தன்மை உதவியற்று தேகம் மனுஷீகம்
            கைவிடப்பட்டோர் போல் துன்ப சாகரத்திலாழ்து
            பாடுகளைப் பாவிகட்குக் காட்ட சத்தமிட்டார்

5.         பாவி யடியார்கள் பல ஆபத்து இக்கட்டில்
            அகப்பட்டால் கைவிடப்பட்டார் போலவே தோன்றும்
            மனதில் திடனற்றுப் போகாதவரைப் பக்தியோடு
            மன்றாடி நிலைநிற்கும் மாதிரியாகவே செய்தார்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே