இன்ப துன்ப நேரத்திலும் உன்
இன்ப
துன்ப நேரத்திலும் உன்
அன்புள்ள இயேசுவைப் பார்
1. இன்பத்தினால் அகமகிழ்ந்து - கிலேசத்தினால்
துக்கித்து
சிற்றின்பப் பேருலகில் - சிக்கிக் கொண்டு
இருக்கும் போதும் - இன்ப
2. சோதனையில் பிடிபட்டு - இடுக்கணில் இருக்கும்போதும்
சாத்தான் உனை மேற்கொள்ளும் போதும், அக்கினியாஸ்திரம்
எறியும்போதும் - இன்ப
3. தோழரால் பகைக்கப்பட்டு - மனக்கிலேசம் அடையும்போதும்
உலகம் உன்னை இகழ்ச்சி செய்து - தன்னிடத்தை
விட்டோடும்போதும் - இன்ப
4. அவர் தாமே சோதிக்கப்பட்டு - பாடு நமக்காய்ப்
பட்டதினால்
அவர் சோதிக்கப்படும் நமக்கு - உதவி செய்ய
வல்லவராம் - இன்ப
5. வறுமையினால் யாசித்து - பாடு மிகப்படும் போதும்
சாத்தான் உன்னை பகடிபண்ணி - உன் விசுவாசத்தைக்
குறைக்கும்போதும் - இன்ப
6. கடு நோயால் பெலன் குன்றி பெலவீனத்தால் தள்ளாடி
ஜீவன் உனக்குக் கசப்பாகி - சாவை நீ விரும்பும்
போதும் - இன்ப
7. பகைஞரால் கல்லெறியுண்டு - மரண நேரம் கிட்டும்போதும்
பக்தன் ஸ்தேவானைப்போல் - தைரியமாய் உன்
இயேசுவைப் பார் - இன்ப
8. நான் என் இயேசுவின் தரிசனத்தை நிமிஷந்தோறும்
காண்கிறதால்
நான்தான் பயப்படாதிரு என்றவர் என்னைத்
தேற்றுகிறார் - இன்ப
Comments
Post a Comment