09 July 2018

உந்தன் சித்தம் போல் நடத்தும்


                        உந்தன் சித்தம் போல் நடத்தும்
                        கர்த்தாவே நீர் நித்தம் என்னை
                        எந்தன் சித்தம் போல வேண்டாம்
                        என் பிதாவே என் யெகோவா

1.         இன்பமான வாழ்க்கை வேண்டேன்
            இனிய செல்வம் சீரும் வேண்டேன்
            துன்பமற்ற சுகமும் வேண்டேன்
            நின் தொண்டு செய்யும் அடியேன்

2.         நேர் சமனாம் நின் வழியோ
            சிறு துரமோ மா தொலைவோ
            எவ்விதத் துயர்க் கடலோ
            ஏழையின் வாழ்வு எதிலும்

3.         அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
            ஆம் இவற்றால் நீர் நடத்தி
            அனுதினம் என்னோடிருப்பீர்
            ஐயனே கடை கனியே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...