09 July 2018

துதிப்பேன் துதிப்பேன் தேவனை


                   துதிப்பேன் துதிப்பேன் தேவனை
                        துதிகள் மத்தியில் வசிப்போனை

அனுபல்லவி

                        அதிசயமானவனை அதிலுமேலானவனை

1.         இரண்டு மூன்று பேர்கள் நாமத்தில்
            கூடினால் வருவேன் என்றீரே
            என்றுரைத்த வாக்கை நிறைவேற்ற
            எங்களில் வந்தவா ஆனந்தம்               - துதிப்பேன்

2.         கடந்த துன்பத்தின் காலங்களில்
            அடைந்த ஆறா துயரங்களில்
            ஆறுதல் தேறுதல் அளித்திட
            மாறாத இயேசுக்கானந்தம்                    - துதிப்பேன்

3.         இன்றைத்தினம் வரைக் காத்தீரே
            எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே
            நின் கிருபையால் கடந்து வந்தோம்
            அன்பே ஆரூயிரே ஆனந்தம்                - துதிப்பேன்

4.         ஆனந்தமே பரமானந்தமே
            அண்ணலை அண்டினோர் கானந்தமே
            அல்லேலூயா உமக்கல்லேலூயா
            எல்லா நாளும் உமக்கல்லேலூயா          - துதிப்பேன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...