09 July 2018

வழி நடத்தும் வல்ல தேவன் வாழ்விலே நாயகனே


            வழி நடத்தும் வல்ல தேவன் வாழ்விலே நாயகனே
            வாழ்வில் நாயகனே நம் தாழ்வில் நாயகனே

1.         பரதேசப் பிரயாணிகளே நாம் வாழும் பாரினிலே
            பரமானந்தத்தோடே செல்வோம்
            பரமன் நாட்டினிற்கே - இயேசு
            பரன் தம் வீட்டினிற்கே

2.         போகும் வழியை காட்டி நல்ல போதனை செய்வார்
            ஏகும் சுத்தர் மீது கண்கள்
            இருத்தி நடத்துவார் - இயேசு
            திருத்தி நடத்துவார்

3.         அந்தகார சக்திகள் எம்மை அணுகிடாமலே
            சொந்தமான தம் ஜனத்தை
            சூழ்ந்து காப்பாரே - இயேசு
            துணையாய் நிற்பாரே

4.         வாதை நோய்கள் வன்துன்பங்கள் வருத்திய போதும்
            பாதையில் நாம் சோர்ந்திடாமல்
            பலப்படுத்திடுவார் - இயேசு
            திடப்படுத்திடுவார்

5.         காடானாலும் மேடானாலும் கடந்து சென்றிடுவோம்
            பாடானாலும் பாடி செல்வோம்
            பரவசமுடனே - இயேசு
            பரன் தான் நம்முடனே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...