27 July 2018

வாழ்வளிக்கின்றார் இயேசு வாழ்வளிக்கின்றார்


                   வாழ்வளிக்கின்றார் இயேசு வாழ்வளிக்கின்றார்
                        வந்திடும் யாவரும் விந்தையில் மூழ்கிட

1.         பாவிகள் என்றாலும் இயேசு பாசமாய் ஏற்கின்றார்
            பண்புகள் இழந்தவர் பலமுறை விழுந்தவர்
            பணிவுடன் மனமுடைந்தவரிடம் வந்திடில்                  - வாழ்

2.         ஞானியர் என்றாலும் இயேசுநேசமாய் ஏற்கின்றார்
            நன்னெறி அறிந்தவர் நடந்திட முயன்றவர்
            நலம்பெறும் விழைவுடன் அவரிடம் வந்திடில்               - வாழ்

3.         தேவைகள் உள்ளோரை இயேசு தாவியே ஏற்கின்றார்
            தம் நிலை உணர்ந்தவர் தளர்வுகள் அடைந்தவர்
            தலை நிமிர்ந்துயர்ந்திட அவரிடம் வந்திடில்               - வாழ் 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...