27 July 2018

இனிக்காத தேனுமில்லை


                        இனிக்காத தேனுமில்லை
                        மின்னாத பொன்னுமில்லை
                        கிறிஸ்தேசு நாயகரின் நற்செய்தி தன்னை
                        அறிவிக்காம கிறிஸ்தவனேயில்ல

1.         கத்தியழைச்சி மொத்தமாகக் கூடி
            காக்கைகள் உண்பது போல - நாம்
            பெத்த இன்பத்தை மத்தவரோடே
            பகிர்ந்தளிக்கணுந்தானே

2.         உப்பத்த மீன் குழம்பு
            குப்பைக்கு போவது போல்
            அப்பன் கிறிஸ்தையனின் - நற்செய்தி தன்னை
            அறிவிக்காமற் கிறிஸ்தவனேயில்ல

3.         பெத்து வளத்து பத்துக் கொடுத்த
            உத்தமங்கப் பத்திச் சொல்ல - நாம்
            வெக்கத்தை கொண்டா அச்சம் பக்கத்தார்
            துப்பிச் சிரிச்சிடுவாங்க

4.         பத்துக்கோடி பெத்தவங்க
            மொத்த அன்பை கூட்டினாலும்
            உத்தமரின் அன்பாகுமோ - அதை சொல்லமறந்தா
            உசிரில்லாத வெறும் பொணமா ஆவேனே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...