எளியவர்க்கு சொந்தம் இந்த உலகம்


                   எளியவர்க்கு சொந்தம் இந்த உலகம் என்று - நம்
                        இயேசு சொன்ன நல்ல காலம் வருமோ? என்று

அனுபல்லவி

                        ஒளியிழந்து விளங்குதவர் வாழ்வு இன்று - அவர்
                        உலகை என்று ஆள்வதோ தலை நிமிர்ந்து நின்று

1.         இறைவனது இல்லமன்றோ இந்த உலகம் - அதில்
            எல்லோர்க்கும் உரிமையுடன் உண்டு இடம்
            அறைகளிலே கதவுகளோ எதுவுமில்லை - இங்கு
            அன்புடனே வாழ்ந்திருந்தால் மறையும் தொல்லை

2.         உள்ளமெனும் சோலையிலே அன்பு மலர்ந்தால் இந்த
            உலகத்திலே சம உரிமை மணம் கமழும்
            வெள்ளமென இறை அன்பு வழிந்தோடினால் - இங்கு
            வறியவர்கள் வாழ்வினிலே வலிமை வரும்

3.         தனி மனிதன் திருந்தி விட்டால் போதாது - இந்த
            தாரணியே முழுத்திருப்பம் பெற வேண்டும்
            இனிமேலே வரும் என்று இருந்திடாதே - இன்றே
            எளியவர்கள் உணர்வூக்கம் பெற வேண்டும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு