10 July 2018

எனக்குப் பிறன் யார் என்றே


                   எனக்குப் பிறன் யார் என்றே
                        ஏசுவிடம் நான் கேட்டேன்
                        என்னையே நல்ல பிறனாக
                        இருந்திட அவர் சொன்னார்

1.         கள்ளர் கையில் அகப்பட்ட மனிதர்
            உள்ளம் நைந்து உழன்றிடும் மனிதர்
            கொள்ளை அடித்து உயர்ந்திடம் மனிதர்
            அத்தனை பேருக்கும் நான்தான் பிறனே

2.         குறைவு கண்டு குலைந்திடும் மனிதர்
            சிறையில் வாழ்ந்து சோர்ந்திடம் மனிதர்
            நிறைவில் பிறரை மறந்திடும் மனிதர்
            அத்தனை பேருக்கும் நான்தான் பிறனே

3.         இல்லம் ஏதும் இல்லா மனிதர்
            நல்லோர் நட்பைத் தெரிந்திடா மனிதர்
            இல்லோர் நாமென்றிருந்திடும் மனிதர்
            அத்தனை பேருக்கும் நான்தான் பிறனே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...