07 July 2018

கலியாணமாம் கலியாணம்


                   கலியாணமாம் கலியாணம்
                        கானாவூரு கலியாணம்
                        கர்த்தன் இயேசு கனிவுடனே
                        கலந்து கொண்ட கலியாணம்

1.         விருந்தினர்கள் விரும்பியே
            அருந்த ரசமும் இல்லையே
            அறிந்த மரியாள் அவரிடம்
            அறிவிக்கவே விரைந்தனள்  

2.         கருணை வள்ளல் இயேசுவும்
            கனிவாய் நீரை ரசமதாய்
            மாற்றி அனைவர் பசியையும்
            ஆற்றி அருளை வழங்கினார்

3.         இல்லறமாம் பாதையில்
            இல்லை என்னும் வேளையில்
            சொல்லிடுவீர் அவரிடம்
            நல்லறமாய் வாழுவீர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...