உள்ளத்தை உமக்கென்று திறந்தே


பல்லவி

                   உள்ளத்தை உமக்கென்று திறந்தே - ஜெப
                        உறவாலே உரையாடி மகிழ்வேன்

1.         விருப்பங்கள் நிறைவேற வேண்டும் - என்று
            வீணான வேண்டல்கள் செய்யேன்
            வருத்தங்கள் மறைந்தோடச் செய்யும் - என்ற
            விதமாக மன்றாடேன் என்றும்

2.         நீர் பேசும் நான் கேட்பேன் என்பேன் - எனது
            நெஞ்சத்தில் உம்வார்த்தை கொள்வேன்
            சீரான உம் சித்தம் கண்டே - அதைச்
            செய்தென்றும் உமைச்சார்ந்து வாழ்வேன்

3.         பிறருக்காய் வேண்டல்கள் புரிவேன் - உலகின்
            பலமாந்தர் நலமொன்றே நினைவேன்
            இறைவா நீர் என்வேண்டல் கேளும் - என்றும்
            என்மீட்பர் கிறிஸ்தேசு மூலம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு