சோபனமாக சுப தினமே


பல்லவி

                   சோபனமாக சுப தினமே
                        மாபெரும் ஆசிகள் மகிழந்தருள்வீர்
                        சுப ஜெய மங்களமே (3)  - ஆமென்

அனுபல்லவி

                        சீர்பெற திருமணம் என்றும் வாழ்க
                        அருளோடும் புகழோடும் வாழ்ந்திடவே

சரணங்கள்

1.         ஆனந்தமாக வாழ்ந்திடவே
            ஆண்டவனருளால் அனுதினமே
            அன்பு கொண்டுந்தன் பதந் தொழுதே
            அல்லல்கள் நீங்கி அகமகிழ்ந்தே          - சீர்பெற

2.         மாநில மீதில் மனமுவந்தே
            மங்கள வாழ்வு தனிற் சிறந்தே
            பாலெனப் பொங்கிப் பல வளனும்
            பாக்கியம் புகழும் பரவிடவே                  - சீர்பெற

3.         சந்ததி பெருகித் தழைத்திடவே
            சாஸ்தவமாக நிலைத்திடவே
            ஆனந்தமாக அமைந்திடவே
            ஆரருள் வாழ்க்கை அழகுறவே            - சீர்பெற

4.         மங்களமாகும் இத்தினம்போல்
            மகிழ்வுடன் மாண்பாய் இருபேரும்
            தங்கவண் செல்வ நாயகனின்
            தாழ்வறு திவ்விய அடி நிழற்கீழ்            - சீர்பெற

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு