09 July 2018

இனிக்கும் தமிழினில் இயேசுவைப் பாடுவேன்


                   இனிக்கும் தமிழினில் இயேசுவைப் பாடுவேன்
                        இதயக் கனிவுடன் இசைமலர் தொடுப்பேன்
                        எளியவன் நானும் இறை புகழுரைப்பேன்
                        எல்லாப் பண்ணிலும் இயேசுவை இணைப்பேன்

1.         மரி உபதேசிகர் மறைஞர் சாமுவேல்
            பெரியண்ணன் மற்றும் பால்மருடனே
            அரியராம் பரமானந்தர் பாடிய                - இனிக்கும்

2.         மறைமுதற் கலைஞரும் மீட்புக் கவிஞரும்
            குறைவில்லாப் புலவர் சந்தியாகரும்
            நிறை மொழி மாசில் மணியரும் பாடிய  - இனிக்கும்

3.         வேதக் கண்ணரும் வீர முனிவரும்
            போதகர் வேத நாயகருடனே
            மேதை யோசேப் பண்ணலும் பாடிய        - இனிக்கும்

4.         ஆபிராம் கலைஞரும் காபிரியேலரும்
            தாவீது ஐயர் தைரியம் எழுத்தர்
            பாவலர் பலரும் பயின்று பாடிய               - இனிக்கும்

2 comments:

  1. Very useful to get this song online

    ReplyDelete
  2. Very useful to get the Song online

    ReplyDelete

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...