இன்ப இயேசுவின் இணையில்லா


பல்லவி

          இன்ப இயேசுவின் இணையில்லா நாமத்தைப் புகழ்ந்து
            இகமதில் பாடிட தருணமிதே
            இயேசுவைப் போல் நல்ல நேசரில்லை
            இன்றும் என்றென்றும் அவர் துதி சாற்றிடுவேன்

1.         நித்தியமான பர்வதமே உந்தனில் நிலைத்திருப்பேன்
            நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே நித்தம் நடத்துகிறீர்
            என்னையும் உம் ஜனமாய் நினைத்தே - ஈந்தீர்
            உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்                                         - இன்ப

2.         பாவத்தில் வீழ்ந்து மாயையிலே ஆழ்ந்து நான் மாள்கையிலே
            பரிந்து தேவ அன்பினைக் காட்டியே
            பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
            பாரில் பரிசுத்தராகுதற்காய் - மிக
            பரலோக நன்மைகளால் நிறைந்தீர்                                           - இன்ப

3.         மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுமாப்போல்
            என் ஆத்துமா உம் பொன் முகம் காணவே
            வாஞ்சித்து கதறிடுதே
            வானிலும் இந்தப் பூமிலும் நீர் - என்
            வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே                                       - இன்ப

4.         ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம் அன்பரை உளம் கனிந்தே
            அளவில்லாத ஜீவனை அளித்தே
            அற்புத ஜெயம் ஈந்தீரே
            அல்லேலூயா துதி கன மகிமை - உம்
            நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்                                             - இன்ப

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு