09 July 2018

இனிமை இனிமை இது இனிமை


                   இனிமை இனிமை இது இனிமை
                        மகிமை மகிமை புது மகிமை
                        இயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தால்
                        இந்நாள் முழுவதும் இல்லை தனிமை (3)

சரணங்கள்

1.         காலையும் மாலையும் புது கிருபை
            கண்ணின் மணிபோல் காக்கும் கிருபை
            இறுதி வரைக்கும் வரும் கிருபை
            நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை                 - இனிமை

2.         மலைகள் விலகினாலும் மாறாக் கிருபை
            மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை
            பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும்
            பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை             - இனிமை

3.         அனாதி சிநேகத்தால் வந்த கிருபை
            ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை
            அழகிய தேவ குமாரன் இயேசு
            அளித்திட்ட அதிசயமான கிருபை                  - இனிமை

4.         வனாந்தர வழிதனில் வந்த கிருபை
            வழி தப்            பிப் போனோரைக் காக்கும் கிருபை
            வல்லமையுள்ள தேவனின் ஆவி
            வரம் தந்து காத்திட்ட தேவ கிருபை                - இனிமை

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...