09 July 2018

கைவிடார் இயேசு கைவிடார்


                   கைவிடார் இயேசு கைவிடார் - நம்மை
                        ஒருபோதும் அவர் கைவிடார்
                        கைவிடார் இயேசு கைவிடார் (2)

1.         சாத்தானின் சேனைகள் வந்தாலும்
            சதி நாச மோசங்கள் பெருகினாலும்
            சேனைகளின் கர்த்தர் இயேசு
            நமக்காக யுத்தங்கள் செய்வார்                           - கைவிடார்

2.         சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
            சத்துருவின் சேனைகள் தினம் பெருகினாலும்
            இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு
            நமக்காக யுத்தங்கள் செய்வார்                           - கைவிடார்

3.         மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்
            எந்தக் காரணமின்றி எள்ளி நகைத்திட்டாலும்
            ஜெய கர்த்தராம் நம் இயேசு
            ஜெயம் காண கிருபை செய்வார்                         - கைவிடார்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...