சீரார் விவாகம் ஏதேன் காவிலே
1. சீரார் விவாகம் ஏதேன் காவிலே
நேராய் அமைத்த தேவ தேவனே
தாராய் மன்றலாசியே
வாராய் சுபம் சேரவே
பல்லவி
நேயனே மகா தூய தேவ
தேவனே
சீர்மேவும் மெய்மனாசி
நீ தரவா
நேயனே மகா தூய தேவ
தேவனே
சீர் மேவுமே ஆசிதா
2. மங்கள மணமகன்
.....................
மங்கள மணமகள்
........................
நேச தேவ தயவாய்
பாசத்துணை சேர்த்துவை - நேயனே
3. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்
நாடு உயர்ந்த தேவ நூலதைத்
தேடித்துணை கொண்டன்பாய்
நீடித்திவர் வாழ்ந்திட - நேயனே
4. ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்
வானோர் சிறந்த கல்விச் செல்வமும்
சான்றோர் போற்றும் நேயரும்
தோன்றித்திகழ் சீரருள் - நேயனே
5. வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
வாழ்க சுற்றத்தார் அன்பர்
வாழ்க சுபமன்றலும் - நேயனே
Comments
Post a Comment