சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

பல்லவி

          சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
            திரியேக நாதனுக்குச் சுபமங்களம்

அனுபல்லவி

            பாரேறு நீதனுக்கு, பரமபொற் பாதனுக்கு
            நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு        - சீர்

சரணங்கள்

1.         ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
            அகிலப் பிர காசனுக்கு நேசனுக்கு மங்களம்
            நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
            ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு     - சீர்

2.         மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
            வளர் கலைக்கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்
            கானான் நல் தேயனுக்கு கன்னிமரி சேயனுக்கு
            கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு     - சீர்

3.         பத்து லட்ச ணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
            பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
            சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதிகாரனுக்கு
            பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு                       - சீர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு