09 July 2018

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்


                   சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
                        ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
                        குறையில்லையே குறையில்லையே
                        ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

1.         புல்லுள்ள இடங்களிலே
            என்னை மேய்க்கின்றார்
            தண்ணீரண்டை கூட்டிச் சென்று
            தாகம் தீர்க்கின்றார்                  - சிங்கக்

2.         ஆத்துமாவை தேற்றுகின்றார்
            ஆவி பொழிகின்றார்
            ஜீவனுள்ள நாட்களெல்லாம்
            கிருபை என்னைத் தொடரும்   - சிங்கக்

3.         எதிரிகள் முன் விருந்தொன்றை
            ஆயத்தப்படுத்துகிறார்
            என் தலையை எண்ணெயினால்
            அபிஷேகம் செய்கின்றார்          - சிங்கக்

4.         என் தேவன் தம்முடைய
            மகிமை செல்வத்தினால்
            குறைகளையே கிறிஸ்துவுக்குள்
            நிறைவாக்கி நடத்திடுவார்      - சிங்கக்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...