வானங்களும் வானாதி, வானங்களும் உமைக்


                   வானங்களும் வானாதி, வானங்களும் உமைக்
                        கொள்ளா அற்புதா!

சரணங்கள்

1.         கிருபையும் நிபந்தனையும் - அருமையாய்க் காத்த தேவா
            பார்த்து வந்தீர், பராமரித்தீர், சேர்ந்து இம்மட்டும் நடத்தினீர்   - வானங்

2.         எல்லா ஜாதி ஜனங்களும், வல்ல இரட்சிப்படையச் செய்யும்
            கல்வாரியின் இரத்தத்தினால், பொல்லாததைச் சுத்தி செய்யும்  - வானங்

3.         நீதி நியாயமுள்ள தேவா - ஜோதியில் வாசஞ் செய்பவர்
            பாவிகளைச் சிநேகிப்பவர், போதியதைப் பொழிகிறவர்              - வானங்

4.         நீரே ராஜாதி ராஜாவே - கர்த்தாதி கர்த்தரானவரே
            எங்களை ராஜாவாக்கினீரே, ஆசாரியர்களாக்கினீரே                 - வானங்

5.         பஞ்சம் பட்டினி கொள்ளை நோயில், கொஞ்சுவோரின் தஞ்சமானவர்   
            அஞ்சுகிறோம் நெஞ்சில் தேவா, எஞ்சுகிறோம் மிஞ்சும் மூவா - வானங்

6.         கைகளினால் கட்டப்பட்டதில், காணப்படா வல்ல தேவா
            மெய்யாயெம்மில் இருக்கிறவா, செய்கைகளினால் தெரிகிறவா   - வானங்

7.         நித்திய வாசியானவர் - சத்தியமாம் பெயர் கொண்டவா
            இத்தரையில் எம்மோடுள்ளவா, அதிபனே உமக்கல்லேலூயா    - வானங்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு