நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை


                   நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை
                        நாவாலே என்றும் பாடு
                        வல்லவர் நல்லவர் போதுமானவர்
                        வார்த்தையில் உண்மையுள்ளவர் - நன்றி

1.         எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
            இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
            கலங்கிடாதே திகைத்திடாதே
            துதியினால் இடிந்து விழும்                  - நன்றியால்

2.         துன்மார்க்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
            தெய்வ பயத்தோடு என்றுமே
            ஆவியினால் என்றும் நிறைந்தே
            சங்கீத கீர்த்தனம் பாடு                         - நன்றியால்

3.         சரீரம் ஆத்துமா ஆவியினாலும்
            சோர்ந்து போகும் வேளையிலெல்லாம்
            துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
            தூயரின் பெலன் கிடைக்கும்                 - நன்றியால்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு