தோத்திரம் பாடிப் போற்றுவேன்


340.

பல்லவி

                    தோத்திரம் பாடிப் போற்றுவேன்
                        தோத்திரம் ஏசு ராஜனுக்கே
                        ஆதியும் அந்தமுமில்லோனே
                        அரூபனே உமக்கென்றும் தோத்திரம்

அனுபல்லவி

                        அல்லேலூயா அல்லேலூயா
                        பொற்கரனே ஒமேகாவே

1.         பொன்னகர் மன்னன் புவி வந்தாரே
            புல்லணை மீதிலே ஸ்தோத்திரம்
            பட்சமுற்ற எந்தன் பாவந்தீர்த்த
            பெத்தலே வாசனே தோத்திரம்              - அல்லேலூயா

3.         மாயமாம் உலகை மறந்த நானும்
            மன்னவா உன் அன்பில் மகிழ்ந்திட
            மயங்காமல் நீர் தாரணியில்
            மனுவான அன்புக்காய் தோத்திரம்         - அல்லேலூயா

4.         மங்களமே சீயோன் மணாளா
            மாறாத பூரண சீராளா
            மங்கிடா நித்திய வாசனே
            மாசற்ற அன்புக்காய் தோத்திரம்            - அல்லேலூயா

5.         அமரர் போற்றும் அழகுள்ளோனே
            அரூபியே சொரூபியே தோத்திரம்
            அளியும் ஆதி அன்பையே
            வழியில் விரைந்து செல்லவே                - அல்லேலூயா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு