பல்லறங்க கனக சபை
269. செஞ்சுருட்டி ஆதி தாளம் (226)
பல்லவி
1. பல்லறங்க
கனக சபை பானுவேலனே
பைங்கிளி
நான் பறந்து போக பாக்கிய ஜீவனே
2. அல்லேலூயா ஓசியன்னா அல்பா ஒமேகா
ஆசைகொண்டு நேசமிஞ்சி வந்தீர் எனக்காய்
3. அழுகையின் பள்ளத்தாக்கைக் கடப்பதென்னாளோ
ஆனந்த சுகமடைந்து சுகிப்பதென்னாலோ
4. கூடுவிட்டு வீடுதொட்டு குலாவி வாழவே
கொஞ்சு கிளியாக நானுன் கரத்தில் வாழவே
5. பாடு துக்கம் கண்ணீர் எப்போ பங்கமாகுமோ
பரமசுகமிஞ்சி எப்போ ரஞ்சிதமாமோ
6. ரத்னப்பரதேசி கீதம் முக்தி காட்டவே
நாளடைவில் உனது காதல் என்னை வாட்டுதே
Comments
Post a Comment