தேவா நீரெங்கள் அடைக்கலமே


289. இராகம் (ஐங்காயத்தின் அடைக்கலம் காவே)                           (247)

பல்லவி

                   தேவா நீரெங்கள் அடைக்கலமே - ஏசு
                   தேவா நீரெங்கள் அடைக்கலமே
                        நாங்கள் செய்யும் துதி பெறப் பாத்திரமே

அனுபல்லவி

            நாவாலுரைக்கொணாத நன்மைக் கிருபாநிதியே
            நரர் வடிவாய் சிறந்த ஞான குணாநிதியே

1.         பருவதம் தோன்றும் முன்னும் பூமியுண்டாகுமுன்னும்
            பத்ராசனத்திருக்கும் நித்ய சுயாதிபதி

2.         ஆயிரமாண்டுன் பார்வைக்கன்று கழிந்த நாளாம்
            ஆண்டவா முடியாத ஆண்டுகள் உன்னதாகும்

3.         புல்லோடு நித்திரையும் பூமலர் வெள்ளமொப்பாய்
            பூலோக மாந்தர் ஜீவன் போகுது பாவத்தாலே

4.         கதையைப்போலாண்டுகளைக் கழித்து விட்டோமே நாங்கள்
            இதயத்துனைப்புகழ்திவ்வாண்ட கண்டோமே எங்கள்

5.         ஞான இருதயத்தை நாங்கள் அடையும்படி
            நாட்களை எண்ணுதற்கு நாதா நற்போதம் தாதா

6.         எங்கள் வாழ்நாளெல்லாம் இதய மகிழ்வதற்கு
            தங்கும் கிருபையாலெ சம்பூரணம் செய்காலை

7.         ஆண்டவா உன் பிரியம் அடியார் மேலாவதாக
            அவரவர் செய்கிரியை அங்கங்குறுதியாக

8.         மோசே முனி உரைத்த முக்ய கீதம் தொண்ணூறை
            தாசன் சற்குணர் கவி சாற்றித் துதிக்கவாராய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு