பரமண்டலங்களிலிருக்கும் எங்கள்
293. இராகம் (சத்திய வேதத்தை தினம் தியானி) (272)
1. பரமண்டலங்களிலிருக்கும்
எங்கள்
பரமபிதாவே
நின் கிருபை
சனமது நேரில் பாவி வந்து
பணிந்துன் பாதம் வணங்கி நின்றேன் - ஆமென்
சுவாமி
2. ஆ! தேவனின் பேர் நாமமெல்லாம்
மாமேன்மையதாய் மகிமைப்பட
தமியோர் நின் மறைப்படி நடக்க
பணிவோடும்மைப் பணிந்து நின்றேன்
3. ஆ! உம்முடைய ராட்சியமும் வர
அலகை அதிகாரமுமொழிய
மனமோ உமதருளால் நிறைய
பணிவாய் பாதம் வணங்கி நின்றேன்
4. விண்ணதிலெங்கும் உமது சித்தம்
வெகு பூரணமாய் நடப்பது போல்
மண்ணுலகெங்கும் செய்யப்பட
மன்னா பாதம் வணங்கி நின்றேன்
5. அன்றன்று வேண்டிய அப்பமதை
அமலா என்றும் அளித்திடுவீர்
என்றும் திருப்தியோடிருக்க
ஏகனே பாதம் வணங்கி நின்றேன்
6. பிறருக்கு நாங்கள் அவர் குறையை
பிரிய மானதாய் மன்னிக்க
அடியார் பிழையை நீர் பொறுக்க
பணிவாய் பாதம் வணங்கி நின்றேன்
7. சருவ ஜீவ தயாபரனே
சகல சத்துருக்கள் வினையால்
சோதனைக்குட்படாதிருக்க
வேதனே உம்மை வேண்டி நின்றேன்
8. அடியாரை எத்தீமை நின்றும்
அன்பாய் விலக்கித் தந்தருளும்
நல்லாறுதலை எமக்கருள்
வல்லா உம்மை வணங்கி நின்றேன்
9. அடியார் கேட்கும் வேண்டல்களை
சரியாயுந்தன் சித்தப்படி
தருவாயென்று நம்பி வந்து
குருவே உம்மைப் போற்றி நின்றேன்
10. ராஜ்யம் வல்லமை மகிமையும்
ராஜாதி ராஜாவே உமக்கு
தாட்சியில்லாமலே என்றென்றுமே
சதா காலங்களிலும் ஆமென் - ஆமென் சுவாமி
Comments
Post a Comment