கருணாகரனே பதமே சரணம்


255. இராகம் தன்யாசி (எத்தனை திரள் என் பாவம்)        (210)   

                   கருணாகரனே பதமே சரணம்
                   கடைவிழி பார் ஐயனே

அனுபல்லவி

                   திருவானோளி பிரகாச சொரூபி
                        சித்தமிரங்கித் தயை வைத்தருள்வாயே

1.         ஆதத்தினாலடர்ந்த மாசறுத்திடவந்த
            அருணோதயம் நீயே
            பாதகரான அடியார் பிழை போக்கி
            பரமசுதந்திர பாக்கியமருள்வாய்

2.         உலகமுடலலகை யிடர்கள் செய்யுதே
            உனதக மெனைவையே
            நிலைவரமாயுன தாவியை ஈந்து
            நிதமுமுனை மறவா நெஞ்சையுமருள்வாய்

3.         பாவ விஷமகற்றும் பண்டிதனீயே
            பலபல தேவர் பொய்யே
            சாவழித்தே நித்ய ஜீவனளித்திடும்
            சகராஜா ஏசுமகாராஜா சுவாமி

4.         சற்குண தாசனும் சபைகளுங்கூடி
            சங்கீத ராகம் பாடி
            பொற்புறுமுன் திருசு் சேவடி போற்றி
            புகழ்ந்தோம் மகிழ்ந்தோம் பொன்னகர் கிறையே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே