மகிழ்வோம் யேசுவில் மகிழ்வோம் - பரன்


204.

                        மகிழ்வோம் யேசுவில் மகிழ்வோம் - பரன்
                        மகிமையுற்றுமே மகிழ்வோம்

அனுபல்லவி

            மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம் மகிமையில் மகிழ - மகிழ்

சரணங்கள்

1.         வானில் யாவரும் மகிழ - யேசு, வாரும் என்றுமே பகர
            மானுவோர்க்கொரு சிகரம் - மன, தாரத் தற்பரனருள்
            மகிமை கனமும் மகிமையில் மிகவும் மகிழ                   - மகிழ்

2.         சுத்த ஜீவியமுடைய - தேவ, புத்திரர் துலங்கிடவே
            சர்வ சிருஷ்டிகளுடைய - மா, கர்மங்களகன்றகல
            மகிழும் தினமும் மகிபரின் தினமும் வரவே                   - மகிழ்

3.         அடிமையானவர் கூடி - பரன், அளித்த பொன் முடி சூடி
            ஆயிரமாண்டுகளாகக் - கடன், மாறியே அரசாள
            மயிலும் குயிலும் ஆடும் புலியுடன் வாழ                                    - மகிழ்

4.         வானம் பூமியுமகல - நவ, வானம் பூவுமே நிகழ
            சாபம் பாவமும் சகல - கடும் ரோகமோடியே விலக
            சுகமும் ஜெபமும் சகலரும் சகித்து மகிழ                       - மகிழ்

5.         பொன்னால் வீதிகளுடைய - அரும், சொல்லால் உரைப்பதற்கரிய
            மின்னும் வச்சிர ஒளியே - நரர் கண்டு களித்திடுமருளே
            கண்ணீர் கவலையும் நண்ணா நகரினில் மகிழ              - மகிழ்

6.         பளிங்குபோல் ஜீவநதியே - இரு, கரையும் ஜீவனின் மரமே
            பசியும் தாகமுமில்லையே - அங்கு  புசிக்க ஜீவனின் கனியே
            புசிப்போம், ருசிப்போம் யேசுவில் நித்தியம் மகிழ           - மகிழ்

7.         சுத்த ஆவியும் சுதனும் - செய்த மீட்பின் செயலைப் பரனும்
            மற்றும் தூதர் கணமும் - அங்கு, உற்று உள்ளம் மகிழ
            போற்றிப் புகழ்வோம், நூதன செயலில் மகிழ                   - மகிழ்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு