பயமேது நமக்குப் பயமேது


271. செஞ்சுருட்டி             ஆதி தாளம் (228)

பல்லவி

                   பயமேது நமக்குப் பயமேது

அனுபல்லவி

                   ஜெயமிகும் தேவனுக்கு சேயர்களாய் நாமிருக்க

1.         ஆறுநாளி லண்டமெல்லாம் அற்புதமாய் படைத்து
            சீருடன் பூசிங்காரித்த தேவனும் நம்மோடிருக்க

2.         சத்துருக்களைச் சிவந்த சமுத்திரத்தினுள் ளமிழ்த்தி
            வெற்றியுடனிஸ்ரவேலை மீட்டு ரட்சித்தோனிருக்க

3.         பஞ்சத்தில் எலியாவுக்குப் பட்சிகளால் அன்னமிட்டு
            மிஞ்சும் தயவால் ரட்சித்த மேலோனும் நம்மோடிருக்க

4.         மூழும் சூளையில் கிடந்த மூவருடனே உலாவி
            தோழரைத் துன்பின்றிக்காத்த துய்யனும் நம்மோடிருக்க

5.         சிங்கக் குகையிற் கிடந்த சீலன் தானியேல் பக்தனை
            யங்கமேதுமின்றிக் காத்த பக்தனும் நம்மோடிருக்க

6.         பாடையிலெடுத்துப்போன வாலிபனைத் தொட்டெழுப்பி
            வாடும் தாயைத் தேற்றி வைத்து வல்லோனும் நம்மோடிருக்க

7.         நாலு நாளாய் கல்லறைக்குள் நாறி ஊனெல்லாம் கழிந்த
            சீலன் லாசரு உயிர்க்கச் செய்தோனும் நம்மோடிருக்க

8.         ஐந்தப்பமிருமீன் கொண்டு ஐயாயிரம் பேர்களுக்கு
            விந்தையாய் போஜனமிட்ட விண்ணவர் நம்மோடிருக்க

9.         தந்தையும் தாயுமுந்தனை தாரணியில் மறந்திட்டாலும்
            உந்தனை மறவேனென்ற உன்னதன் நம்மோடிருக்க

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு