ஏசுராஜனே கண்பாரும்


185.  சகானா      ஆதி தாளம் (293)

பல்லவி

                   ஏசுராஜனே கண்பாரும்
                   இருபேரையும் இதயத்தில் காரும்

1.         கானக்கலிலேயா சென்றாயே
            கதிதருமிகும் அதிரசம் நீயே

2.         ஆறுதலடைவதற்காக
            ஏவை ஆதமோடிருந்ததால் நீயே
           
3.         எலும்பில்லிருந்து படைத்தாயே
            இவர் அன்பைப் பொருத்தி வைப்பாய் நீயே

4.         மாசற்ற மாமிசமாக
            மக்கள் மாளும்வரையும் இசைவாக

5.         பலுகிப் பெருகி இவர் வாழ்க
            திருப்பரமகன் சீர்பதம் சேர

6.         சோதனையாக இராமல்
            பாதி நாளதிலே பிரியாமல்

7.         தேவ சகாயத்தைத் தாரும்
            தேவ திருமகனுனதடி சேரும்

8.         திருச்சபையோரைக் காண்பாரும்
            திருமணமக்கள் கலியாணம் சேரும்

9.         நல்ல (மாப்பிள்ளை பேர்) வாழ்க
            நலமான (பெண் பேர்) வாழ்க

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே