பாவவினை தீருமையா ஏசையா
221. இராகம் (ஆதாரம் நீ தானையா)
(164)
பல்லவி
பாவவினை
தீருமையா ஏசையா
என்
மாவவினை தீருமையா
என் சுவாமி பாவவினை தீருமையா
1. பாவம் மிகுந்தே சாவும் பிடித்தே
பாவி நான் என்ன செய்வேன் என் சுவாமி -
ஏசையா
2. துணிந்த மாபாவி துன்மார்க்கனாகி
தூரமகன்று விட்டேன் என் சுவாமி - ஏசையா
3. கெட்டேன் கெட்டேனே கட்டளை விட்டேனே
கேடுகெட்ட தோஷியானேன் என் சுவாமி - ஏசையா
4. பேய்பாவமுலகம் பெலத்துப் போராடுதே
பேதை புலம்பலானேன் என் சுவாமி - ஏசையா
5. எத்தனையோ தரம் எத்தன் நான் செய்த பிழை
அத்தனையும் பொறுத்தீர் என் சுவாமி - ஏசையா
6. ஐயோ மாபாவி ஆகிலும் தேவாவி
அடியேனுக்கீந் தருள்வாய் என் சுவாமி -
ஏசையா
Comments
Post a Comment