தோத்திரம் தோத்திரமே ஏசுசுவாமிக்குத்
240. தேவாரம் (சத்தாய் நிஷ்களமாய்)
(192)
பல்லவி
தோத்திரம்
தோத்திரமே ஏசுசுவாமிக்குத் தோத்திரமே
அனுபல்லவி
தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்கு
தோத்திரமே
சரணங்கள்
1. கோடாகோடி தூதர்கள் சபைகூடி நடனமாடி
பாடி உமைத்துதிக்க பாவியானும் உமைத்துதிப்பேன்
2. கேருபீன் சேராபீன்கள் உடல் செட்டைகளால் மூடி
நேராய் உமைத்துதிக்க நீசன் யானும் உமைத்துதிப்பேன்
3. கன்னியர் கீதம் பாடி ஏசுகர்த்தனையே போற்றி
உன்னித்துதித்திடவே பாவியானும் உமைத்துதிப்பேன்
4. பரிசுத்தவான்கள் சங்கம் எங்கள் பார்த்திபன்
ஏசுவையே
தரிசித்துப் போற்றிடவே தாசன் யானும் உமைத்
துதிப்பேன்
5. மூப்பர் சுற்றி நின்று எங்கள் முன்னவன் ஏசுவையே
ஆர்ப்பரித்துத்துதிக்க அடியானும் உமைத்துதிப்பேன்
6. வானத்தின் ஜோதி எலலாம் தேவமைந்தனையே போற்றி
ஞாலத்திலே துதிக்கப்பாவி யானும் உமைத்துதிப்பேன்
7. பூமியின் தாவரங்கள் புஷ்பம் பூத்துத் துளிர்
மலர்ந்து
சாமி உமைத்துதிக்கத் தாசன் யானும் உமைத்துதிப்பேன்
8. தாழ்த்தித் தலை குனிந்து ரத்த சாட்சிகள் கூட்டமெல்லாம்
வாழ்த்தி உமைத்துதிக்க பாவி யானும் உமைத்
துதிப்பேன்
Comments
Post a Comment