பாவவினை நீக்குமையா


258. இராகம் (இன்னும் வரக்காணேனடி)    (214)

1.       பாவவினை நீக்குமையா காவின்வினை போக்குமையா
            ஆவி மிக நோகுதையா அலகை வலை வீசுதையா

2.         கவலை மிகத் தோணுதையா அலகை வலை வீசுதையா
            உலகை வென்ற ஏசுநாதா பெலன் கொடுக்க வேணுமையா

3.         பாவி மனம் கலங்குதையா ஆவிவரம் குறையுதையா
            கோபம் என்னை விட்டகற்றி குறைவை நிறைவாக்குமையா

4.         என் தாயால் வந்த ஜென்மப் பாவம் இப்பாவி செய்த கன்மப்பாவம்
            என் ஆவி செய்த அகந்தைப் பாவம் அத்தனையும் தீருமையா

5.         பாவியை நீரழைக்காவிட்டால் தேவா உன்முன் யார் வரலாம்
            திவ்யவாக்கை நம்பி வாறேனையா மனக்கவலை தீருமையா

6.         இருதயத்தை இளகச் செய்து திருவசனம் முறைகிளம்பி
            பெருவிருக்ஷமாய் வளர்ந்த கனிகொடுக்கச் செய்யுமையா

7.         கன்னி சீயோன் மகளே கேளாய் மன்னன் வரக்காலமாச்சே
            சொன்னகுறி நடக்குதம்மா தூங்கவேண்டாம் தூங்கவேண்டாம்

8.         ஏதோ ஒரு இரைச்சலம்மா ஏசுவாராரென்ற சத்தம்
            என் காதில் கேட்டவுடன் மனம் கலங்குதடி பாங்கியரே

9.         கலங்கவேண்டாம் கலங்கவேண்டாம் நம் கருணைநாதன் கிருபைச் சத்தம்
            அலகைச்சாத்தான் நடுங்கும் சத்தம் அன்பர் துதி பாடும் சத்தம்

10.       அன்பு என்னில் பெருகவேணும் அச்சம் பயம் நீங்கவேணும்
            துன்பந்துயர் போகவேணும் துர்க்குணத்தை நீங்கவேணும்

11.       சொப்பனத்திலும்மைக்காண தற்பரனே கிருபை செய்யும்
            அற்பமான உலகவாழ்வை குப்பை என வெறுக்கச் செய்யும்

12.       ஏசுவே உம்சாயல் காண தாசன் யானும் விரும்புகிறேன்
            நீசனுக்குக் காட்சிதந்து தோஷம் என்னை விட்டகற்றும்

13.       வானோர் புகழ்மகிமை நாதா இம்மானிலத்தோர் துதிக்கும் நாதா
            கோனே எந்தன் ஏசுநாதா குற்றம் பொறுத்தாளுமையா

14.       சுந்தரப்பிதாக்குமாரன் ஜோதி பரிசுத்தாவிக்கும்
            சந்ததமும் தோத்திரமே தாசன் யானும் சொல்லுகிறேன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு