உத்தமியே மனம் மெத்தவும்
266. இராகம் (சாலோமின் ராஜா)
(223)
1. உத்தமியே
மனம் மெத்தவும் வாடுது ஓபிரியமே வா துரிதமாய்
ஓடிவந்து
கபாடமே திற ஒ சகோதரியே
2. அத்தி மரங்கள் காய் காய்த்து மதுரம் மெத்த
மலருதே ஆத்துமநேசியே
அதிக சோகம் அனுசரிப்பதால் அருிகல் வா பெண்ணே
3. மாரி நாள் சென்றது மழையும் ஓய்ந்த மகிழ்ந்து
பேசன்னமே மயங்குதே மனமே
மலர்கள் காணுது குருவி பாடுது மனைவியெ
வருக
4. மலை வெடிப்பினில் அலையும் என்னுடமனதுக்கேற்ற
பெண்ணே உனது ரூபைச் சற்றே
வந்து காண்பியுன் இன்ப ஓசையும் மயங்குதே
மனமே
5. கண்களால் சரப்பளியினாலெனைக்கவர்ந்த கொண்டாயே
காதல் மிஞ்சுதே
கந்தவர்க்க வாசந்தருகுதே கன்னியே சீயோனே
6. தேனோழுகுது அமுது மிஞ்சுது சித்ரரூபியே உன்
வஸ்திரவாசனை
சிறந்த லீபனோன் பொருந்திய எந்தன் செல்வியே
கண்ணே
7. தலை பனியினால் நனையுதே எருசாலே மன்னமே சமயமின்னமோ
தாமதமுனக்கேது சொல்லுவாய் சமயமீதல்லோ
8. சற்குண தாசனும் கீதம்பாடிய சத்தம் கேட்குதே
சந்தோஷமாகுதே
சபை எனும் மணவாளியே எனைச்சார்ந்து கொள்வாயே
Comments
Post a Comment