ஆத்ம நாதன் திருவடியே


295. பியாகு      ஆதி தாளம் (274)

பல்லவி

                   ஆத்ம நாதன் திருவடியே நமக்காதாரம்
                   சிலுவைக் கொடியே

அனுபல்லவி

                        தோத்திரம் புகழ் துதியே சங்கீர்த்தனம்
                        பண்பதம் பாடியே                                  - ஆத்தும

1.         புத்தியுள்ள கன்னியரே பரிசுத்தராய் விளங்கினரே
            நித்திரை மிகச் செய்தவரே - பின்
            கத்திக் கத்திப் புலம்பினரே                               - ஆத்தும

2.         ஐங்காயத்தின் அடைக்கலமே, நம்மை ஆதரிப்பதும்
            அவர் கரமே, நங்கூரமில்லா மரக்கலமே
            நாற்றிசையும் ஓடி அழிந்திடுமே                        - ஆத்தும

3.         ஏன் கலங்குகிறாய் நெஞ்சமே, கிறிஸ்தேசுவானவர்
            உன் தஞ்சமே மானிலமுழுதும் பஞ்சமே
            இம்மாயை யாவும் பிரபஞ்சமே                          - ஆத்தும

4.         இயேசு கிறிஸ்துவை விசுவாசி, எப்போதுமே
            அவரை நேசி, வேதபுத்தகம் தினம் வாசி
            அதை வேண்டாம் என்றவர் மாதோஷி             - ஆத்தும

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு