இவராலேயல்லோ பரதேசியாகினேனையா


308. செஞ்சுருட்டி         ஆதி தாளம் (288)

பல்லவி

                   இவராலேயல்லோ பரதேசியாகினேனையா
                   இனந்தானே சகியுன் மனங்கல்லோ என்னோடுவாசும்மா

அனுபல்லவி

                        ஏகாம்பரஜோதி பரனிவர் என்மேல் தயாபரராம்

1.         இனமும் ஜனமும் பணமும் கனமும் எனக்கோ பெரிதல்ல - இவர்
            குணமும் மனவிற்பனமும் பிரியாவனமும் என் சொல்ல

2.         சுந்தர சுந்தர கந்த நிறைந்தவர் எந்தனை புரந்தனராம் - எனை
            அப்புறம் இப்புறம் எப்புறமும் சுமந்தாண்ட சுமந்தனராம்

3.         சோலையில் வந்தவர் சாலையில்லாவழி கால் கடவே நடந்தார் - கொடும்
            தோஷியே ஆறு சீர் மாசற்ற எத்தனை சோபனமாய் மணந்தார்

4.         சொல்லலம் சொல் சொல் இல்லை இலை இலை நல்லம்பல குன்றாம் - ஜல்
            திம் திம் திம் திமி ஜெந்திரி கிடவன் திரு நட எம்பலனாம்

5.         எத்தனை பாக்கியம் எத்தனை இன்பம் எனக்கிதே யானந்தம் - ராஜ
            ரத்தினம் கவியைக் கற்கண்டதாக இவர் கண்டதாலே சொந்தம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு