ஐயா கிறிஸ்து மகராஜா எனை


288. இராகம் (ஐயா கொல்கதாமலைநாதா)   (246)

பல்லவி

          ஐயா கிறிஸ்து மகராஜா எனை ஆதரித்தருள் சருவேசா

அனுபல்லவி

            மெய்யாய் உலகில் வந்த ஈசா - இந்த
            மேதினி முழுவதும் வாசா

1.         ஐயா கொல்கதா மலைநாதா
            எனக்கார் துணை சொல்லனு கூலா
            துய்யா பன்னிருகையாலே உனைத்
            தோத்தரித்தேன் வெகுநாளாய்

2.         எங்கும் நிறைந்த பரஞ்ஜோதி இந்த
            இகபரமிரண்டுக்கும் நீதி
            கங்குல் பகலெனக்கு ஞானி இந்தக்
            கடந்த சொல்லாளி என்னும் நீதி

3.         அன்னை கருவிலுதித்தென்னை மிக
            ஆண்டு வந்தீரோ எந்தன் கண்ணே
            சன்னை பாவி எனக்குச் சொன்னீர் உம்மை
            சாஷ்டாங்கம் செய்தேன் நானும்மை

4.         ஐயா சபையார் நாங்கள் கூடி இங்கே
            ஆனந்தம் கொண்டாடச் செய்தீர்
            இங்கிதமாகவே வந்து நீர்
            பங்கயம்போல் தழைக்கச் செய்வீர்          - ஐயா

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே