கொலைக்காவனம் போறார்
323. கோதாரகௌளம் ஆதி
தாளம்
பல்லவி
கொலைக்காவனம்
போறார், அன்னமே - ஆதாம்
கொடிய
பாவத்தால், இதோ முனன்மே
அனுபல்லவி
வலமைச் சதா நித்திய
தலைமைத் தேவாதி பத்திய
வஸ்தனாதி திருச் சேயன்
உத்தம கிறிஸ்து நாயன்
மனுடர்களுட பிணையாளி மத்யஸ்தன்
எனுட பிரிய மணவாள சிரேஷ்டன்
வங்கண விங்கித லங்கிர்த நேசன்
சங்கமுழங்கிய சங்கையின் ராசன்
மருகிய துயரொடு குருசினில்
மடிய
திருவுளமாய் நமதேகவுங் கொடிய
- கொலை
1. பொந்தியுப்பிலாத் துவின் கீழாக - நின்று
புண்ணியனார் பாடுப்பட்டுச் சாக
பூரியர் ஆரியர் வீரியமாயடர்
காரிர வேசெய் கொடூரமலாதினம் - பொந்தியு
புடவிக்கிருளே விடியற் பொழுதே
படிறுக் கொடியோர் இடு கட்டுடனே யிரண
போரினா ரவாரமாக மனுடகு
மாரான் மீத கோரமாக முறையிடப் - பொந்தியு
2. சிந்தை நடுங்கச் செய்யும் லோக ஞாயத்
தீர்ப்பின் உபாயமெல்லாம் போக
புந்திக்கடாத மாயம் போடிச் சம்பிரதாயம்
பொய்மை மனதான நேயம், பொற்புப் பேச்சா லென்னாதாயம்
போதகராகிய காதகர் கூறவும் யூதர்களாம் வலுபாதகர்
சீறவும் - பொந்தியு
வே.சா.
Comments
Post a Comment