லோகநாதா லோகநாதா


249. கமாசு      ரூபக தாளம் (204)

பல்லவி

                   லோகநாதா லோகநாதா
                   தியாக னுன்மேல் சோகமே
                        ஏகமாயுன தாகமிஞ்சி வாடுகிறேன்

அனுபல்லவி

          சாகவோ நான் வேகவோ நான் போகவோ ஜோடாகவோ

1.         ராஜபாலா ராஜபாலா ராஜஞானலோகனே
            ஆசையுன்மேல் ஏசுபாலா நீசலோகம் சஞ்சலம்
            ஈசனே நீர் மோசஞ் செய்தால் நீசப்பூச்சி நாசமே

2.         நீயும் நானும் ஜோடியானோம் நேச இன்பமாயினோம்
            தாயும் சேயும் போலிருக்க தயவுசெய்யும் நாயகா
            மாயலோகம் காயம் போனால் ராயனுன்னைக்காணுமே

3.         பெண்டு பிள்ளை பந்துலோகம் கண்டுகொண்டு தள்ளுவேன்
            ஒண்டியான உன்சகியென் உற்றதோழன் நீயாக
            கொண்ட தோழன் நீ மணாளன் மண்டலத்தில் யாரையா

4.         சத்யஜோதி வங்ஷராய ரத்ன கீத ரஞ்சிதம்
            நீதா ஜீவா மக்தி வாழ்வு சித்தருக்கருள்வாயே
            பக்திசெய்வேன் வெற்றி நீயே சக்தி நீயேஜாலமே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு