தந்தை தந்தை தந்தை தேவனார்


201. இராகம் (எந்தை எந்தை முந்தும் திருமகன்)                               (292)

1.       தந்தை தந்தை தந்தை தேவனார்
            விந்தை விந்தை விந்தையொடு நமக்
            கிந்த இந்த நவ வருடம்
            தந்தனர் வந்தனமே

                        ஆ! அதிசய புது வருடமிதில்
                        அனந்தம் புகழ் கொள்வோம் மனதில்
                        ஆ! இது சமயம் குணப்படுவோம்
                        அமலனடி பணிக்கேற்றிடுவோம்

2.         சிந்தை சிந்தை சிந்தையதனிலும்
            சொந்த சொந்த சொந்த நாவிலும்
            கந்தை கந்தைச் செயலிதுவே
            கன்மிகளாயினோமே
           
                        ஆ! கொடிதான சாபமுற்றோம்
                        அலகை விஷயமெய்யகமு முற்றோம்
                        மா கொடிதாம் நகரமதில்யாம்
                        மாய்ந்திடாமல் கிறிஸ்தன்பு பெற்றோம்

3.         மிக்க மிக்க மிக்கத் துதி சொலத்
            தக்க தக்க தக்க வரந்தரப்
            பக்க பக்கமது தனிலே
            பரனை மன்றாடுகின்றார்

                        ஆ! கனம் பிதா சுதனாவியர்க்கும்
                        அகமகிழோடு பாடுவோ மென்றைக்கும்
                        ஆ! மனம் வாய் செய்கையதனிலும் யாம்
                        அம்பரன் மறைக்கிசைந் தொழுகிடுவோம்

4.         வாழி வாழி எம்தேசத் தலைவனும்
            மாறாம் வாழி மந்திரிமார்களும்
            வாழி பாளமென்ற் கவர்ன்மென்றுமே
            வாழி திருச்சபை வேதியரும்

                        வாழி கிறிஸ்தவ கல்லூரிகளும்
                        வாழி வைத்திய ஸ்தாபனமும்
                        வாழி பிரபுக்கள் ஏழைகளும்
                        வாழி யாரும் என்றுழி ஆமேன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு