கண்ணையா கண்ணீர் பாரேன்
235. நாட்டைக்குரிஞ்சி சாப்பு தாளம் (181)
பல்லவி
கண்ணையா
கண்ணீர் பாரேன்
அனுபல்லவி
உனைத்தான் துணையாகக் கொண்டேன் ஐயனே
எனக்கானவனே எனக்கானவனே - கண்ணையா
1. ஓடிவா நெஞ்சம் வாடிடுமோ கெடுமோ
உலகைத்தேடுமோ உலகைத்தேடுமோ - கண்ணையா
2. என்னைப்போல் பாவி யாருமில்லை ஒப்பில்லை
உன்னை நான் விடல்லை உன்னை நான் விடல்லை - கண்ணையா
3. புண்பட்டேன் நோகுதே என் செய்வேன் ஐயனே
பொங்குதே பொங்குதே பொங்குதே பொங்குதே - கண்ணையா
4. ராஜப்பா நேசப்பா ஏசப்பா பேசுப்பா
லட்சம் தோத்திரமப்பா லட்சம் தோத்திரமப்பா - கண்ணையா
5. ரட்சகா நம்பினேன் நீ கதி நீ கதி
நயமாம் சுகம் நீ நயமாம் சுகம் நீ - கண்ணையா
6. ராஜியே பரதேசி ரத்னம் நிதியே
நாளெல்லாம் உன் பிள்ளை நாளெல்லாம் உன்
பிள்ளை - கண்ணையா
Comments
Post a Comment