சஞ்சலப்புவனமீது ரஞ்சித


267. இராகம் (ஐயா கிறிஸ்தையா அருளையா)                                   (224)


பல்லவி

                   சஞ்சலப்புவனமீது ரஞ்சித லோகமே

அனுபல்லவி

                   இந்தச் சகடவாழ்வில் மூழ்கிமிகு அகடம் செய்கிறாயே
                        என்னவிகிடம் இதுகபடம் அறி சபதம் சென்னேனே

1.         மறந்திறந்தபின் திரும்புமோ ஜீவன் தான் - நீ
            மயங்கிக்கெடுவாயோ இதன் வாழ்வு செழித்தேனோ
            எமன் வருமுன் குழி புகுமுன்
            பண்படுமுன் பண்பா கேள்                                  - சஞ்சலப்

2.         வம்புலகை எளிதில் நம்பினோர் கோடிப்பேர் - ஓ
            மகுடமுடி ராஜா மரசுகிர்த கவிராஜா
            தேவதாசா பிராண நேசா
            நீசர் யாரும் தூசியாம்                                        - சஞ்சலப்

3.         கூளியைச் சேர்ந்து உன் நாளெல்லாம் போச்சுதே - உன்
            குறும்பு மிஞ்சப்போச்சே தெய்வம் விரும்பினதும் போச்சே
            பயம் ஆச்சே ஜெபம் போச்சே
            கடைமூச்சும் வந்தாச்சே                                  - சஞ்சலப்

4.         ஏக தெய்வமுண்டு இன்பலோகமுண்டு - நீயோ
            இடும்புசெய்தால் தோஷி, கொஞ்சம் இதயம் தனில் யோசி
            வேதம் வாசி போதம் நேசி ஏசை ஆசி விசுவாசி          - சஞ்சலப்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு