வாருங்கள் வாருங்கள் தோழிப் பெண்காள்
186.
வாருங்கள்
வாருங்கள் தோழிப் பெண்காள்
வாழ்த்தி நம்தோழிக்குப் பூமுடிக்க
1. ஆதாமுக்கேவையை அலங்கரித்து
அழகிய சோலையி லமைத்துவைத்து
நாதக்கடவுளை நமஸ்கரித்து
நலமுடனவர்துணை நாடியின்று - வாருங்கள்
2. பூச்செண்டு, பூமாலை புனுகு பன்னீர்
புதுப்பட்டுப் புடவைகள் பொன்நகைகள்
உச்சிதவச்சிரகற்களுடன்
உவப்புடன் உற்றாரெல்லாருங்கூடி - வாருங்கள்
3. மணம் புரிய வரும் மணவாளன்
மங்கை மலர்ந்தமுகம் பார்த்து
குணமான கண்மணி தானுமிவள்
கூடியமனையாளுமென்றறிய - வாருங்கள்
4. அன்புள்ள நம்முடதங்கையரும்
அருமைத்தம் நேசமணவாளனுடன்
இன்புற்றென்னாளும் இப்புவிதனிலே
ஈசன் கிருபையில் வளர்ந்தோங்க - வாருங்கள்
Comments
Post a Comment