வானபிதா தந்த ஆஸ்தியிலே ஏழைகட்குன் மனம் கோண வேண்டாம்


203. செஞ்சுருட்டி                         ஏக தாளம்

1.       வானபிதா தந்த ஆஸ்தியிலே ஏழைகட்குன் மனம் கோண வேண்டாம்
            வாங்குவதைவிட கொடுப்பதுவே நல்லதென்று கர்த்தர் சொல்லுகிறார்

பல்லவி

                        தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரே
                        கேட்கிறாரே கேட்கிறாரே - உங்களை

2.         ஏழைகள் நம்மோடெக்காலமுமே இருப்பதை நாமும் காண்கிறோமே
            ஏழைக்கிரங்குவோர் கர்த்தருக்கு கடன் கொடுப்பவர் ஆகுவரே

3.         பூமியில் பொக்கிஷம் என்னத்துக்கு கன்னமிட அதுகள்ளருக்கோ
            வானத்தின் பொக்கிஷம் சேர்த்துவைத்தால் ஏகோவா உன்னை ஆசீர்வதிப்பார்

4.         ஆலயத்தூழியர் காணிக்கையை ஆண்டவர் காணிக்கையாக எண்ணு
            நல்மன தோடதை ஈயவேண்டும் நாயனுன் மனதைப் பார்க்கிறாராம்

5.         மரம் நட்டுப்பலன் நோக்குவானே மந்தை மேய்த்ததன் பாலுண்ணுவானே
            தேவ சபையின் நல்வேலை எல்லாம் ஆதரிப்பாரின்றிப் போகலாமோ

6.         பொன் வெள்ளி ரத்தினம்தான் கொடுத்து
            உன் நெஞ்சைக் கொடாததென்னத்துக்கு
            பொன் வெள்ளித் தட்டோடுன் உள்ளத்தையே
            பூர்த்தியாய் சாஷ்டாங்கம் செய்குவையே

7.         மனுஷர் உங்கள் நற்கிரியை கண்டு பரம நாதர் மகிமை விண்டு
            தினமும் வீசவே உங்கள் ஒளி கொடுங்கள் பொன் வெள்ளி காணிக்கையாய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு