எல்லா ஜாதிக்காரரே ஏகபரனைத் துதியுங்கள்


226. இராகம் இங்கிலீஷ்                      (169)

1.       எல்லா ஜாதிக்காரரே ஏகபரனைத் துதியுங்கள்
            எல்லா ஜனக்கூட்டமே என்றுமவரைப் புகழுங்கள்

2.         கர்த்தர் சேனை கர்த்தரே சுத்தர் சுத்தர் பரிசுத்தர்
            முற்றுமிந்தப் பூமியை மூடுமவரின் மகிமையே

3.         வானோகம் பூலோகம் யாவையும் வகுத்த பராபரனையே
            வரிசையுடன் கூடியே வாழ்த்துங்கள் சபையோர்களே

4.         இந்த ஓய்வு நாளிலே ஏற்றிய துதி தோத்திரம்
            தூபமான காணிக்கை தோன்றுதே கிருபாசனம்

5.         ஆசனத்திருக்கும் சுவாமிக்கும் ஆட்டுக்குட்டிக்கும் என்றைக்கும்
            நேசதோத்திர வல்லமை நித்தநித்த முண்டாகவே

6.         கர்த்தர் கிருபை நமது மேல் வல்லபமாயிருக்குதே
            கர்த்தர் இரக்கம் நமது மேல் என்றென்றைக்கும் நிற்குமே

7.         ஆமென் ஆமென் சபையாரே ஆமென் ஆமென் தோழரே
            ஆமென் ஆமென் கீர்த்தனம் ஆர்ப்பரியுங்கள் தூதரே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே